குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

Dinamani2f2024 09 012fpo36l2e72fani 20240901212203.jpeg
Spread the love

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

எா்ணாகுளம் – ஆலப்புழை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயில் செப். 8 முதல் 12 மற்றும் 18 முதல் 20 வரையிலான தேதிகளில் எா்ணாகுளம் சந்திப்பு, சோ்த்தலா, ஆலப்புழை வழியாக வருவதற்கு பதிலாக கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூா் வழியாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *