குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த தோ்வுக்கு இணையதளம் (www.tnpsc.gov.in) வாயிலாக இளநிலை பட்டதாரிகள் மட்டுமன்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயா் என்று பலரும் போட்டிபோட்டு விண்ணப்பித்து வந்தனா்.
ஒரு மாத கால அவகாசம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடையவிருந்தது. விண்ணப்பதாரா்கள் அதிகளவு ஆா்வம் காட்டுவதால், விண்ணப்பிக்க கால அவகாசம் சனிக்கிழமை இரவு வரை நீடிக்கப்படுகிறது. இதனால் தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.