இதேபோன்று, முழுநேர விடுதிக் காப்பாளா், தணிக்கை ஆய்வாளா், நிதித் தணிக்கைத் துறை உதவி ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
நிகழாண்டில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2-இல் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2ஏ-இல் 1,820 பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.