குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல் | EPS urged to re examination should be conducted for Group 4 exam

1370407
Spread the love

சென்னை: குளறு​படிகளின் உச்​ச​மாக இருக்​கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்​து, மறு​தேர்வு நடத்த வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 12-ம் தேதி நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்​கும் முன்​னரே, மதுரை​யில் வினாத்​தாள் ஒரு தனி​யார் ஆம்னி பேருந்​தில், முறை​யாக சீலிடப்​ப​டா​மல், கதவின் மேல் ஒரு ஏ4 ஷீட் ஒட்​டப்​பட்ட நிலை​யில் அனுப்​பப்​பட்​டது சர்ச்​சை​யானது. பிறகு, தேர்வு வினாத்​தாளில் பல கேள்வி​கள், குறிப்​பாக தமிழ்ப் பாடக்கேள்வி​கள், பாடத்​திட்​டத்​துக்கு அப்​பாற்​பட்டு இருந்​த​தாக பல்​வேறு தேர்​வர்​கள் புகார் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், தற்​போது, சேலத்​தில் இருந்து சென்​னைக்கு அனுப்​பப்​பட்ட விடைத்​தாள்​கள் அடங்​கிய பெட்​டிகள் முறை​யாக சீலிடப்ப​டா​மல், ஆங்​காங்கே உடைக்​கப்​பட்டு இருப்​ப​தாக செய்​தி​கள் வரு​கின்​றன. குரூப்-4 பதவி​கள், குறிப்​பாக விஏஒ பதவி என்பது தமிழ்​நாடு அரசின் வேர் போன்​றது. சாதி மத பேதமின்​றி, ஏழை எளிய பின்​னணி கொண்ட மக்​கள் அரசு அதி​காரி​கள் ஆகவேண்​டும் என்ற உயரிய எண்​ணத்​தில் எம்​ஜிஆ​ரால் உரு​வாக்​கப்​பட்ட பதவி.

பல லட்​சம் மாணவர்​களின் கனவாக இருக்​கக் கூடிய குரூப்-4 தேர்வு என்​பது, எவ்​வளவு முறை​யாக நடத்​தப்பட வேண்​டியது. ஆனால், இந்த ஸ்டா​லின் மாடல் அரசோ, மெத்​தனப் போக்​கின் உச்​சத்​தில் இந்த தேர்வை நடத்​தி, தேர்​வர்​களின் வாழ்க்​கையோடு விளையாடி​யுள்​ளது. இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது.

எனவே ஜூலை 12 அன்று நடை​பெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்​யப்பட வேண்​டும். உடனடி​யாக மறு​தேர்வு வைக்க வேண்​டும். குரூப்-4 குளறு​படிகள் குறித்து ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் வி​சா​ரணை மேற்​கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *