“குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கு திரையரங்குகளே ஒரே ஆதாரமாக உள்ளன!” – கார்த்திக் சுப்புராஜ் |”Theatres are the only source of revenue for low-budget films!” – Karthik Subbaraj

Spread the love

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமாவுக்கு இது கடின காலமாக இருக்கிறதென குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “சினிமா பிரியராக என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்கிறேன். குறைந்த பட்ஜெட் சுயாதீன படமான ‘சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் இல்லை.

சென்சார் தாமதம் காரணமாக விஜய் சார் போன்ற பெரிய நட்சத்திரம் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது.

மற்றொரு பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘பராசக்தி’ படத்தை நாளை மறுதினம் வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சான்றிதழ் பிரச்னை காரணமாக புக்கிங் இன்னும் தொடங்கவில்லை.

இது சினிமாவுக்கு கடினமான காலம்! திரையரங்குகள் குறைந்தப் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் சுயாதீன படங்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில் பெரிய சாட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *