குறை நம் பார்வையில்தான்! – மன்னிப்பு கேட்க துடிக்கும் மனம் |

Spread the love

   ஒரு நாள் ஆசிரியர் அரையில் ‘ரமேஷ்’ சாருக்கு டீ குடுக்க வந்த ஆயாவிடம் ஒரு விபத்தில் விரல்கள் போய் விட்டது என்று கூறிக்கொண்டு இருந்தார். அது நாள் வரையிலும் பல மாணவர்களுக்கு ‘ரமேஷ்’ சாரின் வலது கையில் விரல்கள் இல்லை என்று யாருக்கும் தெரியாது. 

         ‘ரமேஷ்’ சாருக்கு ஓரான்டில் அரசு பள்ளியில் வேலை கிடைத்து சென்றுவிட்டார் என்பதை தெரிந்துகொண்டோம். ‘ரமேஷ்’ சாருக்கு அரசு வேலை கிடைத்த கொஞ்ச நாட்கள் ஆசிரியர் அரையில் ‘ஜோவின்’ என்ற ஆசிரியர் பிற ஆசிரியர்களிடம் “ரமேஷுக்கு கை பிரச்சனை அதனால ஈசியா கவர்மன்ட் வேலை கிடச்சிருச்சு நம்ம எல்லா கை ஒடஞ்சு போற அளவுக்கு பரீட்சை எழுதறோம் ஆனா ‘ரமேஷ்’ மாறி விரல வெச்சு வேல வாங்க தைரியம் நமக்கு இல்ல” என்று கூறி சிரித்தார்.

        எனது 4 வயதில் வீட்டு திண்ணையில் ஊரில் இருந்து வந்த என்  பெரியம்மாவோடு அமர்ந்து கொண்டு இருந்தேன் அப்போது எங்கள் தெருவில் ‘சிவா’ என்று ஒரு அண்ணன் சரியாக நடக்க முடியாதவர் மெல்ல நடந்து வந்துகொண்டு இருந்தார், அந்த வயதில் மூத்தவர்கள் அனைவரையும் நான் வாடா போடா என்றுதான் கூப்பிடுவேன்.

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

என் வீட்டில் அதை பெரிதாக என்னை கண்டிக்கவில்லை அன்று ‘சிவா’ அண்ணாவை பார்த்து அவரின் உடல் குறையை வைத்து கிண்டல் செய்து விட்டேன் என் பெரியம்மா முன்னால் , என் பெரியம்மா வீட்டுக்குள் என்னை அழைத்து சென்று தோசை திருப்பியில் இடக்கையில் சூடு போட்டு விட்டார் “இனி யாரையும் இப்படி கிண்டல் பண்ணக்கூடாது என்று “.. அப்போது வாங்கிய சூட்டின் எரிச்சல் வலி ஆறிவிட்டது என்னுள் இப்போது வரைக்கும் ‘சிவா; அண்ணாவை அப்படி கிண்டல் செய்தது ஆறாத வலியாகவே இருக்கிறது .

       சென்ற மாதம் ஒரு டீ கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன் அப்போது ஒருவர் அவரின் வலது கை கால் சரியாக நடக்க முடியாமல் நடந்து வந்து  மெல்ல அமர்ந்து டீ வாங்கி குடித்துக்கொண்டு இருந்தார் அவரை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது , அவர் அருகே சென்று நான் “சார் நீங்க டீச்சரா என்றேன்” , “ஆமாப்பா என்று” நான்கு பள்ளிக்கூடத்தின் பெயர்களை கூறினார். அவர் கூறிய நான்கு பள்ளிகளில் ஒரு பள்ளியில் நான் படித்தேன் என்றேன். 

“சார் உங்க பேரு ‘ஜோவின்’ சாரா  என்றேன். “ஆமா தம்பி நீங்களும் அந்த பள்ளிக்கூடம்தானா சந்தோஷம் பேசுனதுக்கு வீட்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க, என் பொண்னு பக்கத்தில எனக்கு காத்திட்டு இருக்கா நான் கிளம்பனும்” என்று கூறிவிட்டு கை,கால்களை இழுத்துக்கொண்டே நடந்து சென்றார். ‘ஜோவின்’ சார் வலது கை கால்கள் அவ்வாறு எப்படி ஆனது என்று ஒரு நிமிடம் நான் யோசித்தபோது மின்னல் போல் என் மனதில் என் பள்ளியில் கை விரல்கள் இல்லாமல் இருந்த ‘ரமேஷ்’ சாருக்கு அரசு வேலை கிடைத்ததை ‘ரமேஷ்’சாரின் உடல் குறையை வைத்து கிண்டல் செய்து கொண்டு இருந்தார் ‘ஜோவின்’ சார் அந்த நிகழ்வு என் மனதில் மின்னல் போல் வந்து போனது.

  இயற்கை எவ்வளவு நேர்மையானது நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் எதிர் வினை ஆற்றியபடியே இருக்கிறது. நான் அறியாத வயதில் கால் சரியாக நடக்க முடியாத ‘சிவா’அண்ணாவை கிண்டல் செய்ததற்கு இயற்கை என்னை பெரிதளவு தண்டிக்கவில்லை என் பெரியம்மாவிடம் சூடு வாங்கியது மட்டுமின்றி அதே ஆண்டு வண்டியில் காலை விட்டு 2மாதம் நான் நடக்க முடியாமல் இருந்தேன். ஆனால் ‘ஜோவின்’ சாருக்கு வலது புறம் மொத்தமாக செயல் இழந்து போனது. 

         எனது வண்டி ஒரு முறை பைபாஸில் ரிப்பேர் ஆகி சர்வீஸ் செய்ய ஆட்கள் கிடைக்காமல் திருமணத்தின் போது  பெண்ணின் கையை பிடித்து அக்னிகுண்டத்தை சுத்துவதுபோல் , எனது வண்டியை பிடித்து கொண்டு அக்னிநட்சத்திர வெயிலில் ஒரு நாள் நடந்தே என் வீடு வர நேர்ந்தது , அப்போதிலிருந்து தினமும் எங்காயாவது செல்லும் முன் வண்டியில் என் பழைய வீட்டு தெருவில் ஒரு ரவ்ன்ட் போவது வழக்கம் , நான் சின்ன வயதில் கிண்டல் செய்த ‘சிவா’ அண்ணாவை இப்போது பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது  , அங்கு ‘சிவா’ அண்ணாவை பார்க்கவில்லை வீடு மாற்றி சென்று விட்டார் , என் பழைய தெருவில் யாருக்கும் ‘சிவா’ அண்ணா இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ‘சிவா’ அண்ணாவை பார்த்து அவரை கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்கும் வரை என் மனக்குறை நீங்காது.             

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *