இதற்கு முன்னதாக ஆட்கள் இல்லாத 3 பரிசோதனை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் 5 தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி அமைக்க 2028-ம் ஆண்டில் ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் இந்த பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரபட்டினம் ஏவுதளத்தின் அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இது ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமையும். இந்த திட்டம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று பேசுவதற்கு பதிலாக, இந்திய நாட்டிற்கான ஒரு முக்கியமான மையமாக பார்க்கப்பட வேண்டும். 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும். அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும். சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்து திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் இலக்குடன் செயல்படும். இதற்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றார்.