லெக்-ஸ்பின்னர், கூக்லி, ஃபிலிப்பர் – இங்கு உட்கார்ந்துகொண்டு என்னாலும் கணிக்க முடியவில்லை. ரீப்ளேவிலும் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது.
குல்தீப் யாதவை மிகவும் இள வயதில் கேகேஆர் அணியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் முகமது ஷமியும் காலை உணவு. மதிய உணவு, இரவு உணவு, போட்டியின்போது என எப்போதும் என்னுடன் இருப்பார்கள்.
அவர்கள் போட்டியில் விளையாடாவிட்டாலும் எனதருகில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க வேண்டும் என்ற பசி அதிகமாக இருந்தது. குல்தீப் யாதவுக்கும் அது இருந்தது.
ஒருமுறை முகமது ஷமி என்னை விமான நிலையத்தில் காரில் கொண்டுவந்து விட்டார். ஏன் எனக் கேட்டேன்? அதற்கு அவர், ‘நீங்கள் பொதுவாக என்ன பேசினாலும் கேட்க வேண்டும்’ எனப் பதிலளித்தார்.
இருவருமே இந்திய நாட்டிற்காகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் எனக் கூறினார்.