இரவு நேரங்களில் கரூரிலிருந்து இயக்கப்படும் SETC பேருந்துகள் தற்போது சுங்க கேட் வரை வந்து பிறகு முசிறி சென்னை இயக்கப்படுகிறது. பேருந்துகள் குளித்தலை பேருந்து நிலையம் வரை வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிறகு முசிறி சென்னை வரை இயக்கப்பட வேண்டும். கரூர் திருவள்ளுவர் மைதானம் போன்று குளித்தலை நகர பகுதியில் பொதுமக்களுக்கு நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் குளித்தலை அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுத்திடவும் சிறிய அளவில் மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுகிறோம். குளித்தலை நகராட்சி எல்லையை அருகில் உள்ள கிராம ஊராட்சிகளின் மக்களின் எண்ணங்களை உணர்ந்து விரிவுபடுத்திட வேண்டும். குளித்தலை நகரப் பகுதியில் உள்ள தென்கரை பாசன வாய்க்கால்களில் நடை பாலங்கள் உள்ளது.
தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப இது பத்தாது. நான்கு சக்கர மற்றும் ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் குளித்தலையில் சண்முகானந்தா தியேட்டர் அருகில் ஒரு பெரிய பாலமும், மலையப்ப நகர் மற்றும் திருச்சி சாலையை இணைக்கக்கூடிய வகையில் பெரிய பாலமும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது, காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதேபோல், தென்கரை பாசன வாய்க்கால்களில் பழுது அடைந்த அனைத்து சிறு பாலங்களை பெரிய வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். குளித்தலை வாரச்சந்தைக்கு நிரந்தரமாக கட்டடம் உள்ள ஓர் இடத்தை தேர்வு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டும்.
தினசரி நகராட்சி காய்கறி மார்க்கெட் அமைத்துக் கொடுக்க வேண்டும். கடைசியாக, குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால், இங்கு செழிப்பாக விவசாயம் நடைபெறும். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். குளித்தலை சட்டமன்றத் தொகுதி மக்களின் சார்பாக தொகுதி மக்களுக்குத் தேவையான கோரிக்கைகள் இவை. இவற்றை வேட்பாளர்கள் முயற்சிக்க வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வாழ்த்துகள். எங்கள் கோரிக்கைகளை அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.