இதுகுறித்து தலைமை அர்ச்சகர் கூறுகையில்,
காலநிலைக்கு ஏற்ப பால ராமருக்கு உடைகளுடன், உணவுகளும் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் தினசரி சடங்குகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதாவது குளிர்காலம் தொடங்கியவுடன் ராமரை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டப்படும். கருவறையில் சூடான சூழலைப் பராமரிக்க ஹிட்டர்கள் நிறுவப்படும். கடுமையான குளிர்கால நாள்களில் ராமருக்குச் சூடான காற்று வீசும் கருவியும் பொருத்தப்படும்.
மேலும் கோயிலில் உள்ள ராமரின் மூன்று சகோதரர்கள் மற்றும் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பாரில் வசிக்கும் ஸ்ரீ அனுமருக்கும் குளிர்கால ஆடைகள் உடுத்தப்படும் என்று அவர் கூறினார்.
பால ராமரின் கருஞ்சிலை உருவம், மைசூருவைச் சேர்ந்த கலைஞரால் தயாரிக்கப்பட்டு, அயோத்தியில் வெகு சிறப்பாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாள்தோறும் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.