“குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம்” – விஜய் வாழ்த்து | TVK Leader Vijay Children Day Wishes

1339674.jpg
Spread the love

சென்னை: “நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை, விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.

நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம். குழந்தைகளை எந்நாளும் போற்றி மகிழ்வோம்,” என்று குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *