காயில் உள்ள கஃபைன் என்பது ஸ்டிமுலன்ட் (Stimulant) எனப்படும் தூண்டல் தன்மை கொண்டது. பெரியவர்கள்கூட சோர்வாக இருக்கும்போது, அதிலிருந்து மீள, ஒருவித புத்துணர்ச்சிக்காக காபி குடிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். குழந்தைகள் காபி எடுத்துக்கொள்ளும்போது, அதிலுள்ள கஃபன் காரணமாக அவர்கள் அதிக சுறுசுறுப்புடன் (Hyperactive) மாற வாய்ப்புள்ளது. அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதோடு, அவர்களின் கவனத்திறனிலும் (Concentration) குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.
டீயில் உள்ள டானினும் கஃபைன் போன்றதுதான். டீயில் உள்ள “பாலிபினோல் டானின்’ (Polyphenol Tannin) என்பது, சத்துகள் உடலில் சேர்வதற்குத் தடையாக இருக்கிறது. குறிப்பாக, நாம் உணவு உண்ணும்போது அதனுடன் டீ அருந்தினால், உணவில் உள்ள இரும்புச்சத்து (Iron) மற்றும் கால்சியம் (Calcium) ஆகியவற்றை உடல் உறிஞ்சுவதை இது தடுக்கிறது. இந்தச் சத்துகள் சரியாகக் கிடைக்காதபோது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.

ஆரம்பத்தில் ஒரு வாய் தானே என்று குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்க ஆரம்பிப்போம். நாளடைவில் அது குழந்தைகளுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் குழந்தைகளும் நிறைய காபி, டீ குடிக்கப் பழகுகிறார்கள். இந்திய மற்றும் அமெரிக்க குழந்தை நல மருத்துவ சங்கங்களின் (Indian and American Association of Pediatric Guidelines) அறிவுறுத்தலின்படி, 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு காபி, டீ கொடுப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிதமான அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.