குழந்தைகளுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது அம்மாக்களின் இயல்பு. பால் குடிக்கும் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும், அணியும் துணி மிருதுவாக இருக்க வேண்டும், சாப்பிடும் பொருள்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால், தினமும் இரண்டு முறை நேரடியாக வாய்க்குள் போகும் டூத் பேஸ்ட்களை பெரும்பாலான அம்மாக்கள் கவனிப்பது இல்லை.
இன்று சூப்பர் மார்க்கெட்டுல கிடைக்கும் பிரபலமான டூத் பேஸ்ட் பிராண்டுகள், ‘6 வயதுக்கு மேல் மட்டும் பயன்படுத்தவும்’ என்ற எச்சரிக்கை அட்டையிலே இருக்கிறது… ஆனால் நாம பெரும்பாலும் அதை கவனிக்காமல் வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்களைத் தான் குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம்.

பொதுவாக குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது, நிறம், மிருதுத்தன்மை, டிசைன் போன்றவற்றை, பயன்படுத்தும் வயது பார்த்து வாங்குறோம். ஆனால் பேஸ்ட் வாங்கும் நேரத்தில்…? வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்துற அதே பேஸ்ட்தான், எளிதாக குழந்தைகளுக்கும் கையில் கொடுக்கப்படுகிறது.
“பேஸ்ட் தானே’ என்று தோன்றும் சின்ன முடிவு பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகளின் பேஸ்ட் விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ராம்.