குவைத் தீவிபத்தில் தமிழர்கள் உள்பட 49 பேர் பலி

2
Spread the love

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இன்று (12 ந்தேதி) அதிகாலை அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த தொழிலாளர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

3(1)

49 பேர் பலி

கடும் புகைமூட்டம், மற்றும்தீயில் சிக்கி சுமார் 49 தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. பலியானவர்களில் தமிழர்களும் இருப்பதாக தெரிகிறது.

ஆனால் பலியானவர்கள் பற்றி விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. சுமார் 50 தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் பலியானவர்களில் பெரும்பாலானோர் கேரளமாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

Sasss

தமிழர்

இந்த நிலையில் தீவிபத்தில் சிக்கியவர்களில் யாரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய தூதர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தீவிபத்து பலி பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

1

உதவி எண்கள்

மேலும் தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான, +91 1800 309 3793 (இந்தியாவுக்குள் ), +91 80 6900 9900, +91 80 6900 9901 (வெளிநாடு ) தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகம்

இதனிடையே, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கம் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழிசையை அமித்ஷா கண்டித்தாரா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *