கூட்டணிக் கட்சிகளுக்கான கணக்கை முடிப்பது எப்போது?- அறிவாலயத்தில் நடந்த ஆலோசனை! | DMK plans to finish the alliance by soon

Spread the love

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள  கட்சிகளுக்கான தொகுதிகளின்  எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில்  எடுத்துள்ளது.  

ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான  தொகுதிகளை ஒதுக்காமல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என கூட்டணி கட்சியினர் முரண்டு பிடிக்கிறார்கள். இதனால் கணக்கை முடித்து தேர்தல் தேர்தல்  வேலையை துவக்குவது எப்போது என ஆலோசிக்கிறது அறிவாலய வட்டாரம். 

திருச்சியில்  நடந்த மாநாடு தி.மு.கவுக்கு திருப்பம் தரும் மாநாடாக இருக்கும் என தி.மு.க தலைமை உற்சாகத்துடன் சொல்லிவருகிறது. ஆனால், “கூட்டணிக் கட்சிகளை உற்சாகப்படுத்தாமல், எப்படி தி.மு.கவுக்கு மட்டும் மாநாடு திருப்பம் தரும்” என கடுப்பில் இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர்.

ஸ்டாலின் - திமுக

ஸ்டாலின் – திமுக

தொகுதி குறைப்பு நடவடிக்கை

இன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொகுதி உடன்படிக்கையை இறுதி செய்ய அறிவாலயத்திற்கு வந்தனர். தி.மு.க தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை செய்தனர். அப்போது, `கடந்த முறை உங்களுக்கு ஆறு இடங்களை ஒதுக்கினோம், இந்த முறை ஒரு இடத்தையாவது குறைத்து கொண்டு ஐந்து இடங்களை வாங்கிக்கொள்ளுங்கள்” என தேர்தல் பேச்சுவார்த்தை குழுவினர் சொல்ல, கடும் டென்சனில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்துள்ளார்கள். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *