“தவெக தலைமையில் மாபெரும் மக்கள் சக்தி நம்முடன் அணி அணியாகத் திரண்டிருக்கும்போது எந்த அடிமைக் கூட்டணியிலும் சேரும் அவசியம் நமக்கு இல்லை. தவெகவின் கூட்டணி சுயமரியாதைக் கூட்டணியாக இருக்கும். நம்பி வருவோருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்களிப்பு தரப்படும்’ என மாநாட்டில் பேசியிருப்பது தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைய அக்கட்சித் தலைமை காட்டும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.
தான் அமைக்கப்போவது கூட்டணி ஆட்சிதான் என்பதை மட்டுமல்ல, தனித்து ஆட்சி அமைக்கும் அளவிலான வெற்றியைத் தான் எதிர்பார்க்கவும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் நடிகர், மன்னிக்கவும், தலைவர் விஜய்.
மதுரையில் பெரும் திரளாகக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கூடிக் கலைந்தபோது, பலரும் 2005-இல் இதேபோல மதுரையில் மாநாடு கூட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) நடிகர் விஜயகாந்த் தொடங்கியதுடன் ஒப்பிடத் தவறவில்லை.
அப்போது போலவே இப்போதும் எழுப்பப்பட்ட கேள்வி “யாருடைய வாக்கைப் பிரிக்கப் போகிறது இந்தக் கட்சி?.