கூலி என் பயணத்தின் பொக்கிஷம்: லோகேஷ் கனகராஜ்

dinamani2F2025 08
Spread the love

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்துடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கூலி என் பயணத்தில் ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். தலைவர் ரஜினிகாந்த் இணைந்ததும் எல்லாரும் தங்களின் அன்பை ஊற்றியதே இந்தப் படம் உருவானதற்கு காரணமாக அமைந்தது. இந்த வாய்ப்புக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

உங்களுடன் (ரஜினி) படத்திலும் படத்திற்கு வெளியேவும் நாம் பகிர்ந்த உரையாடல்களை மறக்க முடியாத பொக்கிஷமாக வைத்திருப்பேன்.

எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியதற்கு என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த 50 பிரகாசமான ஆண்டுகளில் உங்களை நேசிக்கவும், உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உங்களுடன் வளரவும் செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கூலி திரைப்படமல்ல… ராம் கோபால் வர்மா பதிவு வைரல்!

director lokesh kanagaraj shares his working experience with rajinikanth

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *