சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் “கூலி” திரைப்படத்தின் டிரெண்டில் சிங்கப்பூர் காவல்துறையும் ரீல் விடியோ வெளியிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள, “கூலி” திரைப்படம் வரும் ஆக.14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.
இந்தியாவின் முன்னணி நடிகர்களான, நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே, இந்தத் திரைப்படம் குறித்த மீம்ஸ்களும், ரீல்ஸ் விடியோக்களும் சமூக வலைதளங்களில் குவிந்த வண்ணமுள்ளன.
இத்துடன், 100 நாள்கள் மட்டுமே உள்ளது என 3 மாதங்களுக்கு முன்பு திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் இடம்பெற்ற விடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அந்த விடியோவை பலரும், தங்களது நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் மறு உருவாக்கம் (ரீ-கிரியேட்) செய்து வெளியிட்டு வந்த நிலையில், அதே பாணியில் சிங்கப்பூர் காவல் துறையும் ரீல் விடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், சிங்கப்பூர் காவல் துறையின் பல்வேறு படையினரும் அடுத்ததடுத்து இடம்பெற்றுள்ளது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்ததுடன், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: காந்தா படத்தின் முதல் பாடல் அப்டேட்!