டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன்
மேலும் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கெஜ்ரிவாலை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதனால் ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார்.
கென்யாவில் வெடித்த போராட்டம்.. பாதுகாப்பாக இருங்கள்! இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
சி.பி.ஐ.கைது- 3 நாள் காவல்
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதற்கிடையே மதுபான கொள்கை விவகாரத்தில் திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை இன்றுகாலை சிபிஐ கைது செய்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது சி.பி.ஐ. அரவிந்த் கெஜ்ரிவாலை 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரியது. அனால்3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவிட்டார். ரிமாண்ட் காலத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை தினமும் 30 நிமிடங்களும், அவரது வழக்கறிஞரை தினமும் 30 நிமிடங்களும் சந்திக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் அவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் வீட்டு உணவுகளை எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டீ-பிஸ்கட்
சிபிஐயால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பண மோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார்.
முன்னதாக கோர்ட்டில் அஜர்படுத்த கெஜ்ரிவாலை போலீசார் அழைத்து வந்த போது அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது. உடனடியாக அவரை கோர்ட்டில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்று டீ, பிஸ்கொட் கொடுத்தனர். பின்னர் கெஜ்ரிவாலை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: