முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 43-ஆவது பிறந்த நாள். இதையொட்டி தனது பிறந்த நாளை மனைவி சாக்ஷியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இருவரும் மாறி மாறி கேக்கை ஊட்டி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.
அப்போது தோனியின் காலை தொட்டு வணங்குவது போல் சாக்ஷி விளையாட்டாக சைகை செய்தார். இந்த பிறந்த நாள் நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்ட தோனி, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தோனியில் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவரது ரசிகர்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் செய்து தோனியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.