தில்லி துணை முதல்வராக பர்வேஷ் சர்மா பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, தில்லியின் துணை முதல்வராக செயல்படுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.
2013, 2015, 2020 ஆம் ஆண்டுகளில் புது தில்லி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த அரவிந்த் கேஜரிவால், கடந்த தேர்தலில் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 47 வயதான பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
மேற்கு தில்லியிலிருந்து 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பர்வேஷ் வர்மா, 2013 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், அவர் மெஹ்ராலி தொகுதியிலிருந்து முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு தில்லி தொகுதியிலும், 2019 ஆம் ஆண்டு மீண்டும் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 4.78 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.