அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கிர்த்தி கிசான் அமைப்பு தலைவர் பல்தேவ் சிங்கின் மகளும் பஞ்சாபி நடிகையுமான சோனியா மான் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆம் ஆத்மி கட்சி குடும்பத்தில் அவருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசம்: சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம்!
சோனியா மான் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மராத்தி உள்பட பல்வேறு மொழிகளின் படங்களில் நடித்துள்ளார். ‘ஹைட் என் சீக்’ என்கிற மலையாள படத்தில் முதன்முதலில் அவர் அறிமுகமானார்.
மேலும் அவர் 2020 இல் ஹேப்பி ஹார்டி மற்றும் ஹீர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது தந்தை கிர்த்தி கிசான் அமைப்பின் தலைவர் பல்தேவ் சிங் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.