கேட்டாலே புண்ணியம்… தீய சக்திகள் விலகும்… தினமும் அவசியம் கேட்க வேண்டிய லலிதா சகஸ்ரநாமம்!! | Lalitha Sahasranamam Parayanam with lyrics

Spread the love

ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட, வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளிப்பட்டது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1,000 கூறும் ஸ்தோத்திரமும் உருவானது. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம். இந்த அற்புதமான ஸ்தோத்திர பாராயணத்தை வேதம் கற்றுணர்ந்த இளைஞர்களான ஷ. ஸாம்பசிவம், சு.நாகேந்திரன் சிவம், க.கைலாஷ் சிவம் ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் மிகுந்த புண்ணிய பலனைத் தரும். சக்தி விகடன் பார்வையாளர்கள் அனைவரும் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டுப் பார்த்துப் படித்துப் புண்ணிய பலன் அடையவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *