7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி இந்த மாதம் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா, காஜிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஐவரில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, மகளிர் ஒற்றைப் பிரிவு, இரட்டையர் மகளிர் மற்றும் குழுப் போட்டி பிரிவு என மூன்று போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். வெற்றிக் களிப்பில் இருக்கும் கீர்த்தனாவிடம் பேசினோம்.

பயம், பதட்டம் எல்லாம் இருந்துச்சு
“முதல் முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகிட்டேன். பயம், பதட்டம் எல்லாம் இருந்துச்சு. நான் வெற்றி பெற்ற தருணத்தை விட, ஒவ்வொருத்தரும் என்னை பாராட்டும் தருணம் நெகிழ்ச்சியா இருக்கு. இந்த மகிழ்ச்சியான தருணத்துல நான் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கிறேன்.