கேரம் வீராங்கனை கீர்த்தனாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித் | Director Pa. Ranjith met and congratulated carrom player Keerthana in person.

Spread the love

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது.

இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இதையடுத்து சென்னை திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா, “நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனக்கு சரியான வீடு கூட இல்லை, அரசு அதையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.”‘ என்று அரசிற்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

கேரம் வீராங்கனை கீர்த்தனா

கேரம் வீராங்கனை கீர்த்தனா

இந்நிலையில் கேரம் வீராங்கனை கீர்த்தனாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித், “நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதல்வரிடம் வைக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *