மேற்கு வங்கம் – பங்களா
முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம், 1999-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை “பஷ்சிம் பங்களா” அல்லது “பங்களா” என்று மாற்றுவதற்கு முதலில் முன்மொழிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2011-ல் மம்தா பானர்ஜி முதல்வரான பிறகு, மாநிலத்தின் மாற்றுவதற்கு மாநில அரசு முன்மொழிந்தது. அதையும் மத்திய அரசு நிராகரித்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019-ல், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீண்டும் ஒரு பெயர் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. ஆங்கிலத்தில் “வங்காளம்”, வங்காளத்தில் “பங்களா” மற்றும் இந்தியில் “பங்களம்” என்று பரிந்துரைத்தது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜியின் அதிருப்தி வந்திருக்கிறது.