கேரளா: “பொன்னு மோளே நீ சாக மாட்டாய்” – 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு | Kerala 5 people saved lives through organ donation from 10-month-old baby

Spread the love

கேரள மாநிலத்தின் உறுப்பு தானம் செய்த மிகவும் வயது குறைந்த குழந்தை இதுவாகும். உறுப்பு தானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“பொன்னு மோளே நீ மரணமடையமாட்டாய், வேறு குழந்தைகளின் உடலில் வாழ்வாய்’ எனக் கேரள மக்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

உறுப்புதானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம்

உறுப்புதானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம்

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்து மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. தனது அன்புக்குரிய குழந்தையை இழந்த வேதனை இருந்தபோதிலும், ஆலினின் பெற்றோர் அவரது உறுப்புகளைத் தானம் செய்ய முடிவு செய்தனர்.

ஆலின் ஷெரின் ஆபிரகாம் மூலம் 5 பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும். குழந்தையிடம் பெறப்பட்ட உறுப்புகள் முதற்கட்டமாக 2 குழந்தைகளுக்குத் தானம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மகத்தான முயற்சியை வெற்றிபெறச் செய்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். இந்த விஷயத்தில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது.

உடல் உறுப்பு தானத்தில் ஆலின் ஷெரினின் பெற்றோர் கேரள சமூகத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். அவர்களின் துயரத்திலும், இந்த ஊர் மக்களின் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *