கடந்த சில மாதங்களாகவே மணிசங்கர் அய்யர் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சசி தரூர், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அவர், நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் அளித்திருந்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி வெளியுறவு அமைச்சராக்கவில்லை என்பதற்காக, இப்போது மோடியின் வெளியுறவு அமைச்சராக முயலும் சசி தரூரை விட கொள்கையற்ற, பதவியைத் தேடுபவரை நான் பார்த்ததில்லை. காங்கிரஸ் கட்சி கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அல்ல.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஒரு பொம்மை மட்டுமே. ஜெய்ராம் ரமேஷ் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லும் கிளிப்பிள்ளை. கே.சி. வேணுகோபால் போன்ற ஒரு ரவுடியை சர்தார் படேல் அளவிற்கு உயர்த்தும் கட்சியின் நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு காந்தியவாதி, நேருயவாதி, ராஜீவியவாதி. ஆனால் நான் ஒரு “ராகுலியன்’ அல்ல.