இந்த நிலையில் இடமாறுதல் செய்யப்பட்ட கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்துவது உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னொருபுறம், ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஜெ.நிஷாபானுவை வேண்டுமென்றே கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து அவரை 9 வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்’ என்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் மற்றொரு தரப்பினர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஜெ.நிஷாபானு, டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்” என்ற குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் உத்தரவுப்படி நீதிபதி ஜெ.நிஷாபானு கேரள உயர்
நீதிமன்றத்தில் பொறுப்பேற்பாரா? மாட்டாரா? என்பது அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.