போலீஸ் டீம் ஏற்படுத்திய பொய்க்கதை கோர்ட்டில் தகர்ந்து விட்டது. இந்த வழக்கில் என்னை குற்றவாளி ஆக்குவதற்காக கூட்டுச் சதி நடந்துள்ளது.
சமூகத்தில் என் கேரியர், என் இமேஜ், என் வாழ்க்கையையும் இல்லாமல் செய்வதற்காக இந்த வழக்கை புனைந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக எனக்காக ஆத்மார்த்தமாக துணை நின்ற நண்பர்கள், உறவினர்கள், என் மீது அன்பு கொண்ட கோடிக்கணக்கான மனதுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்காக ஆத்மார்த்தமாக கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தீர்ப்புக்குறித்து கருத்து தெரிவித்த நடிகை பாக்கியலட்சுமி, “பாதிக்கப்பட்ட நடிகை இதற்கு மேல் அனுபவிக்க வேண்டிய கஷ்டம் எதுவுமே இல்லை. நடிகை அனுபவித்த மிகப் பெரிய கொடுமைக்கு என்னச் செய்யப் போகிறார்கள்? கண்ணால் காண்பதை எல்லாம் பரிகசிக்கவும், ட்ரோல் செய்யவும் செய்பவர்கள் – அவர்களுடைய வீட்டில் உள்ள பெண்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படும் போதே பாடம் படிப்பார்கள்.
திலீப்பின் பெயரை கூறியது பாதிக்கப்பட்ட நடிகை அல்ல; முதல் குற்றவாளியான பல்சர் சுனிதான் அவரது பெயரைச் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் எத்தனையோ பேர் இருக்கும் போது ஏன் அவரது பெயரை கூற வேண்டும்? பல்சர் சுனிக்கு கொட்டேஷன் கொடுத்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.