கேளிக்கை பூங்காவில் இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்

dinamani2F2025 08 012Fjhhafb0q2Fride1a
Spread the love

சவுதி அரேபியாவில் கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் கேளிக்கை பூங்காவில் இருந்த ‘360 டிகிரி’என அழைக்கப்படும் அதிவேக சுழற்சி ராட்டினம் ஒன்று வழக்கம்போல சுற்றிவந்துக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டாக உடைந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ராட்டினத்தில் சவாரி செய்த 23 பேர் காயமடைந்துள்ளனர், 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக பூங்கா ஊழியர்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *