தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகின்றன. அக்கட்சியின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு நெருக்கமானவராக இருப்பதால் இவர் தான் வேட்பாளர் என்பது உறுதியாகியிருப்பதாகவும் பரவலாக பேசப்படுகின்றன.
தேமுதிக-வில் அவைத்தலைவர் கே.வி.ஆர்.ராஜரத்தினம் வைட்டமின் செலவு செய்வதற்கு தயாராக இருப்பதால், பிரேமலதா இவருக்காக தொகுதியை கேட்கிறாராம்.

அதே நேரத்தில் திமுக-வில் சுமார் 35 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாகவும் சீட்டுகான ரேஸில் பலர் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த திமுக-வினரிடம் பேசினோம்,
“1996 தேர்தலுக்கு பிறகு கடந்த 2021 தேர்தலில் திமுக இங்கு நேரடியாக களமிறங்கி தொகுதியை கைப்பற்றி, அண்ணாதுரை சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பாஜக எதிர்ப்பால் தொகுதிக்குள் கணிசமாக வசிக்கும், இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருப்பதால் இங்கு மீண்டும் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும்னு ஏகப்பட்ட பேர் தலைமையின் கதவை தட்டி வருகின்றனர்.