கே.சி.வீரமணியைக் கண்டு பின்வாங்குகிறாரா தேவராஜி? – ஜோலார்பேட்டை தொகுதி சடுகுடு..! | is dmk devaraji backing down after seeing admk kc veeramani? – jolarpettai constituency situation

Spread the love

இந்த நிலையில், 2026 தேர்தலிலும், நான்காவது முறையாகப் போட்டியிட வீரமணி ஆயத்தமாகி, தீவிர களப்பணியிலும் ஈடுபட்டு வருவது, தேவராஜியை கலக்கமடையச் செய்திருக்கிறது. இதனால்தான் ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இருத் தொகுதிகளுக்குமே அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் தேவராஜி. இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் மேடைப் போட்டு தேவராஜியை கிழித்து தொங்கவிட்டு, பகிரங்க சவாலும் விடுத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவி.சம்பத்குமார், `கல்யாணம், காது குத்து, வாழ்வு, சாவு என எதுக்குமே தேவராஜி வாணியம்பாடி தொகுதிக்குள்ளும் வருவதில்லை; ஜோலார்பேட்டை தொகுதிக்குள்ளும் செல்வதில்லை. தேவராஜி இரட்டை வேடம் போடுகிறார். ஜோலார்பேட்டை தொகுதியில் அண்ணன் வீரமணியை எதிர்த்து மீண்டும் போட்டியிடு வெற்றிபெற்றுவிடு பார்க்கலாம். எதுக்கு வாணியம்பாடி கேட்குற. உனக்கு தெம்பு, திராணி, தைரியம் இருக்கிறதா? வீரமணியை இந்த முறை நீ ஜெயிச்சுட்ட நான் அரசியலை விட்டே ஒதுங்கிக்கிறேன்’ என்று சவால்விட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு பேச்சாளர் பேசியிருந்தால்கூட கண்டுகொள்ளத் தேவையில்லை. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரே போட்டிக்கு அழைத்திருக்கிறார். அவர் சவால்விடுக்கும் வீடியோவும் படுவைரலாகி, பொதுமக்களிடமும் கவனம் பெற்றுவிட்டது. எனவே, தேவராஜி அவ்வளவு எளிதாக தொகுதி மாறி சென்றுவிட முடியாது. ஒருவேளை தொகுதி மாறிச் சென்றால், அ.தி.மு.க-வினர் விடுத்த சவால் ஜோலார்பேட்டை தொகுதியிலும் எதிரொலிக்கும்; வாணியம்பாடி தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே சமயம், வாணியம்பாடி தொகுதிக்குள் தேவராஜிக்குப் பெரிதாக வரவேற்பு இல்லை. வாணியம்பாடி நகரத் தி.மு.க-வினரே தேவராஜிக்கு எதிராக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணியை எதிர்த்து தேவராஜி களமிறங்குவதுதான் சரியாக இருக்கும். இதையெல்லாம் கவனித்த பிறகே, `ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தேவராஜியை மீண்டும் ஜோலார்பேட்டையில் களமிறக்க அமைச்சர் எ.வ.வேலு முடிவுசெய்திருக்கிறார்’’ என்கின்றனர் விவரமாக.

இந்த அரசியல் வெப்பத்தால் தகிக்கிறது `திருப்பத்தூர்’ மாவட்டம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *