இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரத்தை மட்டும் தனியாக தனது இல்லத்துக்கு அழைத்து தமிழக நிலவரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது தான் சிதம்பரம், “தேவையில்லாமல் நாம் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நம்பகமான கூட்டணியை நாம் கைவிட கூடாது” என்று சொல்லியுள்ளார்.
சோனியா காந்தியும் தி.மு.க-வுடன் கூட்டணியை தொடரவே விரும்பியுள்ளார். “கடந்த முறையை விட கூடுதல் இடங்களை கொஞ்சம் கொடுக்க சொல்லுங்கள், கூட்டணி தொடர்பான முழு அதிகாரத்தையும் கார்கே வசம் ஒப்படைத்துவிட்டோம்” இந்த மெசேஜை ஸ்டாலினிடம் நேரடியாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லியுள்ளார்.

தி.மு.கவுடன் கூட்டணியை தொடர சோனியா காந்தி விரும்புவதை புரிந்துக்கொண்ட சிதம்பரம், மார்ச் 3-ம் தேதி அதிகாலையே டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார். தான் முதல்வர் இல்லத்திற்கு வரும் தகவலை செல்வபெருந்தகை மூலம் முதல்வருக்கு தெரியப்படுத்திவிட்டார்.
ஏற்கனவே கார்க்கே, தி.மு.க கூட்டணி ஆதரவாளராக இருக்கும் நிலையில், கூட்டணி முடிவை இனி அவரே எடுப்பார் என்று டெல்லி தலைமை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று மாலை அதிகாரபூர்வமாக தி.மு.க பேச்சுவார்த்தை குழுவை காங்கிரஸ் குழு சந்தித்து எண்ணிக்கை மற்றும் ராஜ்யசபா இடங்களையும் உறுதி செய்ய உள்ளது என்கிறார்கள்.
சிதம்பரம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபோதே தி.மு.க தரப்பு உற்சாகமாகிவிட்டது. சிதம்பரம் சிக்கல் இல்லாமல் இந்த விவகாரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். முதல்வர் சந்திப்பு, கூட்டணி குழு பேச்சுவார்த்தை என அடுத்தடுத்து தி.மு,க -காங்கிரஸ் கூட்டணி சுமுகமான பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.
சிதம்பரத்தின் முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.!