கொஞ்சமே சாப்பிட்டாலும் குறையாத உடல் பருமன்… எடையைக் குறைக்க என்னதான் வழி? | Weight that doesn’t drop despite eating a small amount… what is the way to lose weight?

Spread the love

பேசல் மெட்டபாலிக் ரேட் ( BMR) என்ற கணக்கு ஒன்று இருக்கிறது. ஒருவருடைய கிட்னி, மூளை, இதயம் என ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்ய  குறிப்பிட்ட அளவு ஆற்றல் அவசியம். அதற்கான கலோரிகளைக் கணக்கிடுவதுதான் பி.எம்.ஆர்.

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1,600 கலோரிகள் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நபர் மதிய உணவிலேயே பலமாகச் சாப்பிட்டு, கிட்டத்தட்ட 1,000 கலோரிகளை  எடுத்துக்கொள்கிறார். தவிர, காலை உணவு, இரவு உணவு என எல்லாம் சேர்ந்து அந்தக் கணக்கு 2,500 – 3,000 கலோரிகள் வந்துவிடும். அப்படிப் பார்த்தால் மதியம் அவர்  சாப்பிட்டது ஜங்க் ஃபுட் என்றுதான் கணக்கிடப்பட வேண்டும்.

ஒரு நபர் சரியாக ஒரு நாளைக்கு 1,600 கலோரிகள்தான் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த 1,600 கலோரிகளை எரிக்க உடல்ரீதியான இயக்கம் இல்லாவிட்டால் அதுவும் ஜங்க் ஃபுட்டாகவே உடலில் சேரும்.  ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

சராசரி எடையுள்ள ஒருவர் ஒரு மணி நேரம் நடந்தால், சாதாரணமாக 200 கலோரிகளை எரிக்க முடியும் என வைத்துக்கொள்வோம்.  

அதுவே 30-40 கிலோ அதிக எடையுடன் இருக்கும் ஒருவர், தினம்  ஒரு மணி நேரம் வாக்கிங் போகிறார் என்றால்  அவரால் வேகமாக நடக்க முடியாது. மெதுவாகவே நடப்பார். 150 கலோரிகளைத்தான் எரித்திருப்பார்.

அன்றாட வேலைகளையும் அவரால் வேகமாகச் செய்ய முடியாது. உடலின் வளர்சிதை மாற்றம் குறையும்போது, 200 கலோரிகளை எரிக்க, அந்த நபருக்கு 6 மணி நேரம் தேவைப்படும். குறைவாகச் சாப்பிட்டாலும், எடையைக் குறைக்க முடியவில்லை எனச் சிலர் புலம்புவதன் பின்னணி இதுதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *