“கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுன” : தங்கம், வெள்ளி விலை மேலும் சரிவு, நகைப்பிரியர்கள் ஹாப்பி  – Kumudam

Spread the love

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்வு புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ1,34,400 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800, நேற்று ஒரே நாளில் கிராம் ரூ.1,190 உயர்வு. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

வெள்ளியும் கிராமுக்கு ரூ.25 உயர்வு. ஒரு கிராம் வெள்ளி ரூ.425 விற்பனை. ஒரு கிலோ வெள்ளி ரூ,4,25,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த வந்த தங்கம், வெள்ளி விலை இன்றைய தினம் சற்றே குறைந்து உள்ளது. 

இன்றைய தினம் காலை தங்கம் சவரனுக்கு  ரூ.4,800  விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.600 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.16,200-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,29,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இதே போன்று இன்று வெள்ளி கிராம் ரூ.10 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.415 விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000 விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் மீண்டும் மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 குறைந்தது. கிராமுக்கு ரூ.350 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,850 விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ரூ.4,800 குறைந்தது.ஓரே நாளில் தங்கம் சவரன் ரூ.7,600 குறைந்தது. 

வெள்ளி விலையும் ஓரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் குறைந்தது. காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.10 குறைந்துள்ளது. ஓரே நாளில் ரூ.20 ஆயிரம் ரூபாய் கிலோவிற்கு வெள்ளி விலை குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,05,000 விற்பனை ஆகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *