“கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட” : தங்கம் விலை அதிரடி சரிவு, சவரனுக்கு ரூ.5360 குறைவு  – Kumudam

Spread the love

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்தன. இருப்பினும், பிப்ரவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்தன. மேலும், அவற்றின் விலைகள் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. 

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களால், மார்ச் 1 அன்று தங்கத்தின் விலை மீண்டும் விண்ணை முட்டியது. அந்த நேரத்தில், தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை தொடும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக தங்கம் விலை சரிந்து வருகிறது. 

கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.333 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,620-க்கும், பவுனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,960-க்கும் விற்பனை ஆனது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,18,864-க்கு விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கு விற்பனை ஆனது.

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ 5360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,600-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,950-க்கு விற்பனை ஆகிறது. இதே போல் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *