கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் உள்ளூர் போலீஸார் நடத்திய விசாரணையின்போது தனிப்படையில் இருந்த உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், வேலுசாமி, மகேஷ் குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதே போல், இந்த எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்துவந்த ஊழியர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும் போலீஸார் தனியாக விசாரித்து வருகின்றனர்.