கொடி நாளில் பெருமளவு நிதி வழங்குங்கள்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Dinamani2f2024 09 302fvvaixn0k2fmkstalin.jpg
Spread the love

கொடி நாளில் பெருமளவு நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கு நம் நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள படைவீரர் கொடி நாள் செய்தியில்,

தம் பெற்றோரையும், தாம் பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், படைவீரர் கொடி நாள். இக்கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

நாட்டின் எல்லைகளையும், நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். எத்தனையோ ஆயிரம் வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். ஏனையோர், எப்பொழுது எத்தகைய துன்பம் வந்தாலும், சிறிதும் அஞ்சாமல் தங்கள் கடமையே பெரிதென்று எண்ணிப் பணியாற்றுகிறார்கள்.

இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு இராணுவ வீரர்களுக்கு உண்டு. அந்தப் பொறுப்பினை நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இராணுவ வீரர்களுடைய குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், பொருள் உதவியும், பிற உதவிகளும் செய்திட வேண்டும் என்பதை நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்தக் கொடி நாள் நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது.

ஜனநாயகத்தின் ஆணி வேர் நியாயமான தேர்தல்: விஜய்!

பல நலத் திட்டங்களை வழங்கி, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலன் காப்பதில், நமது மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே, இவ்வாண்டு கொடி நாளிலும் பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் நம் நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *