கொடைக்கானலில் உறைபனி: கருகும் பயிர்கள்; விவசாயிகள் கவலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு | People are facing difficulties due to frost in Kodaikanal

1345647.jpg
Spread the love

கொடைக்கானல்: கொடைக்கானலை உறைய வைக்கும் உறை பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைப் பனி காலமாக இருக்கும். இம்முறை டிசம்பர் மாதம் பரவலாக மழை பெய்ததால் உறை பனி குறைந்து அடர் பனிமூட்டம் நிலவியது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் 10 முதல் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 5 முதல் 9 டிகிரி செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலையும் நிலவி வருகிறது.

அதிகாலையில் புல்வெளிகள் வெண்மையாகப் பனி படர்ந்து உறைந்து கிடைக்கின்றன. கடுமையான குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த சூழலை மிகவும் ரசிக்கின்றனர். பிற்பகல் 3 மணி வரை இதமான வெயில் அடிக்கிறது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் உறைய வைக்கும் அளவிற்கு உள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

இதே நிலைமை நீடித்தால் சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் சூழல் உள்ளது. பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஸ் கார்டனில் நிழல் வலையால் தாவரங்களை மூடி தோட்டக்கலை துறையினர் பாதுகாத்து வருகின்றனர். அதே சமயம், விவசாய நிலங்களில் பனிப்பொழிவால் செடிகள் கருகி வருகின்றன. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *