கொளத்தூர்: "அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!"- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை

Spread the love

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பேசிய அவர், ” தமிழகம் இந்த நிலைமைக்கு செல்ல திமுக தான் காரணம். திமுக ஆட்சி விரைவில் விடைபெறப்போகிறது. பெண்கள் பாதுகாப்பு இல்லாத, போதைப்பொருள் அதிகமாக உள்ள இந்த அவலத்துக்கு திமுகவே காரணம்.

தவெக விஜய்
தவெக விஜய்

சோறு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்து விடலாம். அடிப்படை வசதி இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன், தீய சக்தி திமுக அரசில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்களா? ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று தயவு செய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். நம்பிக்கையாக இருங்கள்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *