பெண்களைப் பொறுத்தவரை அதிக வெயிட் தூக்கும்போதுதான் சருமத்தின் அடியில் உள்ள சப்கியூட்டேனியஸ் ஃபேட் (Subcutaneous fat ) என்ற கொழுப்பும், வயிற்றுப் பகுதியில் உள்ள விஸெரல் ஃபேட்டும் (Visceral fat) கரையும்.
கூடவே நல்ல டயட்டையும் பின்பற்ற வேண்டும். இதனால் உங்கள் உடல் ஆண்களைப் போலவெல்லாம் மாறிவிடாது. ஆண்களிலுமே வெயிட் தூக்கும் எல்லோருக்கும் தசைகள் உருண்டு, திரண்டு மாறுவதில்லை. அதற்காக பிரத்யேக பயிற்சிகள் செய்வது, அதிக அளவு புரதம் சாப்பிடுவது, சப்ளிமென்ட் எடுப்பது எனப் பல விஷயங்களைச் செய்வோருக்குத்தான் அப்படி மாறும்.

புரோட்டீன் உணவுகள் கொழுப்பைக் கரைக்க உதவும் என்பது உண்மைதான். அதே சமயம், அதற்காக கார்போஹைட்ரேட்டையும் கொழுப்பையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் தேவையற்றது. ஒரு கட்டடம் கட்ட, சிமென்ட், மணல், தண்ணீர் என எல்லாமே அவசியம். உடலுக்கும் அப்படித்தான்.
கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதச்சத்து என மூன்றுமே அவசியம். அவற்றின் அளவுதான் முக்கியம். சிலர் கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்த்தால் சீக்கிரம் எடை குறையும் என்று நினைத்து அதைத் தவிர்ப்பதுண்டு. அதுவும் தவறானது.
கார்போஹைட்ரேட்தான் உடலின் ஆற்றலுக்கான பிரதானம். அதைத் தவிர்க்காமல், 60 சதவிகிதம் புரதம், 30 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 10 சதவிகிதம் கொழுப்பு என்ற விகிதத்தில் உணவுப்பழக்கத்தை வைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.