கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

Dinamani2f2025 03 222fuvfgnz412f4525c22mini 1063744.jpg
Spread the love

கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஹிந்துஸ்தான் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கோவையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி உறுதிக் கடிதங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மொத்தம் 2008 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2,43,377 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இந்த முகாமில் 295 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சமமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு உதவும் வகையில் கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமான நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் 4,61,000 மகளிா் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘ கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது. கூடுதலாக மின்சார தேவை ஏற்பட்டாலும் ஒப்பந்தம் மூலமாக உடனடியாகப் பெறப்படும். தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின்சார நிறுத்தம் எங்கும் இல்லை. மின் பழுது ஏற்பட்டாலும் சரிசெய்ய போதிய பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *