கோட் டிரைலர்!

Dinamani2f2024 08 172fml9gmdev2fscreenshot202024 08 1720170641.png
Spread the love

நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

செப்.5 ஆம் தேதி கோட் படம் வெளியாக உள்ளதால், இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

தற்போது, படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இரண்டு விஜய் கதாபாத்திரங்கள், ஸ்டண்ட் காட்சிகள் என படத்தின் மீது ஆவல் உருவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *