கோட் படத்தின் பட்ஜெட் மற்றும் வணிகம் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.