கோபியில் திரளும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியாவதால் பரபரப்பு | Gobi: Sengottaiyan to make big anouncement

1375444
Spread the love

ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது.

அண்மையில், கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​திருந்தார். இது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கோபியில் உள்ள கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அவர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவரது பேச்சை ஒளிபரப்ப அலுவலகத்துக்கு வெளியே பெரிய திரை வைக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அவரது தொகுதி மக்களும் கூட ஷேர் ஆட்டோக்கள் மூலம் நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

பிரச்சினையின் பின்னணி என்ன? அத்​திக்​கட​வு – அ​வி​நாசி திட்ட கூட்டமைப்பு சார்​பில் கடந்த பிப்​ர​வரி மாதம் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அன்​னூரில் நடந்த பாராட்டு விழா​வில் எம்​ஜிஆர், ஜெயலலிதா படங்​கள் இடம்​பெறாததைக் கண்​டித்​து, முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி எம்​எல்​ஏவு​மான கே.ஏ.செங்​கோட்​டையன் விழாவைப் புறக்​கணித்​தார். தொடர்ந்​து, பழனி​சாமி​யின் பெயரை தவிர்த்து செங்​கோட்​டையன் பேசி​யது, அவரது அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​யது. எனினும், அவரை சமா​தானப்​படுத்த கட்​சித் தலைமை எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், சில நாட்களுக்கு முன்னர் கோபி​யில் உள்ள தனது வீட்​டில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த செங்​கோட்​டையன், “கோபி​யில் வரும் 5-ம் தேதி காலை செய்​தி​யாளர்களை சந்​தித்து மனம் திறந்து பேச உள்​ளேன். அது​வரை பொறுமை காக்க வேண்​டும்” என்​றார்.

17570442882027

பரவிய வதந்தி: செங்​கோட்​டையனுக்​கும் அதி​முக தலை​மைக்​கும் இடையே ஏற்​பட்​டுள்ள முரண்​பாட்​டுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​காத​தால், கடந்த 6 மாதங்​களாக பல்​வேறு வதந்​தி​கள் சமூக ஊடகங்​களில் பரவி வரு​கின்​றன. இதில், செங்​கோட்​டையன் அதி​முக​வில் இருந்து வில​கி, திமுக​வில் இணைய உள்​ளார் என்ற வதந்​தி​யும் ஒன்​றாகும். இந்​நிலை​யில், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேச உள்​ள​தாக செங்​கோட்​டையன் அறி​வித்​தது அதிமுக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *