கோபியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: பதில் அளிக்காமல் செங்கோட்டையன் மவுனம் | Sengottaiyan remains silent about EPS

1378016
Spread the love

ஈரோடு: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு தனது சொந்த தொகு​தி​யான கோபி​யில் அளிக்​கப்​பட்ட உற்​சாக வரவேற்பு குறித்து செய்​தி​யாளர்​களின் கேள்விக்கு முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் பதில் அளிக்​க​வில்​லை.

அதி​முக மூத்த தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான செங்​கோட்​டையன், ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டிப்​பாளை​யத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் இருந்து கோவை வழி​யாக விமானத்​தில் சென்னை செல்​வதற்​காக நேற்று புறப்​பட்​டார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

திருமண நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​வதற்​காக சென்னை செல்​கிறேன். இரவே வீடு திரும்​பு​கிறேன். எனது கருத்​துக்கு பொதுச் செய​லா​ளர் இது​வரை பதில் அளிக்​க​வில்​லை. இது தொடர்​பான எனது கருத்தை ஏற்​கெனவே தெரி​வித்துவிட்​டேன். கட்சி ஒருங்​கிணைப்பு பணி​கள் எப்​படி போகிறது என்​பதை நீங்​கள்​தான் சொல்ல வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அப்​போது, கோபி​யில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அளிக்​கப்​பட்ட உற்​சாக வரவேற்பு குறித்து செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, கேள்விக்கு பதில் அளிக்​காமல், கை கூப்பி வணக்​கம் தெரி​வித்​து​விட்​டு, அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *