விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து சொத்தப்பினார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியை வழிநடத்துகிறார்.
சிட்னியில் கடைசி டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார். ஆனால், நடுவர் தீர்ப்பினால் தப்பித்தார்.
பின்னர், ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பார்டர் – கவாஸ்கர் தொடரில் விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. இளம் வீரர் கான்ஸ்டஸுடன் மோதியதால் கோலிக்கு ‘கோமாளி கோலி’ என ஆஸி. ஊடகங்கள் விமர்சித்தன. தற்போது, கோலி மீண்டும் அதே மாதிரி ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்களே கடுப்பாகி கோமாளி கோலி என கிண்டல் செய்து வருகிறார்கள்.
ரோஹித் சர்மா போல விராட் கோலியும் ஓய்வு எடுக்கலாம் என விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய அணி 66 ஓவர் முடிவில் 148/8 ரன்கள் எடுத்துள்ளது .