சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூா் சுங்கச்சாவடியிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கோயம்பேடு அருகிலுள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூா் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கனவே அளித்து அனுமதியின் படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆா் சாலை வழியாக புதுச்சேரிக்கும், பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் இசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.