புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தளைப் பாத்திரம், பழைய இரும்புப் பெட்டி, சேலையுடன் மூதாட்டி ஒருவர் கொண்டுவந்து விடப்பட்டார்.
உணவின்றி கடும் குளிரில் வாடிய அந்த மூதாட்டியைப் பார்த்த குருக்கள் சரவணன், அவருக்கு உணவு கொடுத்து, அவரின் நிலை குறித்து கேட்டறிந்தார். அதோடு, இந்த மூதாட்டி குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த பொன்னமராவதி டி.எஸ்.பி தங்கராமன் அறிவுறுத்தலின்படி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாக பகுதிக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் பத்மா, மூதாட்டியை விசாரித்தபோது மூதாட்டி பெயர் பொட்டையம்மாள், மேலூர் அருகில் உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரின் மனைவி என்பது தெரியவந்தது.
அதோடு, தன்னை ஆட்டோவில் அழைத்து வந்து இந்தப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றதாகவும் மூதாட்டி கண்ணீரோடு கூறினார்.